Skip to main content

ஈரோடு எம்.எல்.ஏ. கொடுத்த 25 லட்சம்.... சுற்றி வளைத்தாலும் அது மக்கள் பணம் தாங்க!!!

Published on 03/04/2020 | Edited on 03/04/2020

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு உதவும் வகையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். இதையடுத்து பல்வேறு தொழில்நிறுவனங்கள், தனிநபர்கள் உள்ளிட்டோர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர்.

 

Erode MLA 25 lakhs .... Even if the people are around to bear money


இந்நிலையில் தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று இன்று ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ் .தென்னரசு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய், 25 லட்சம் வழங்கியுள்ளார். இந்த தொகைக்கான காசோலையை ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர்  கதிரவனிடம் இன்று எம்.எல்.ஏ.  தென்னரசு வழங்கினார்.

எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியை கொடுத்திருந்தால் அது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கும் ஆனால் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்சம் கொடுத்திருக்கிறார். தொகுதி மேம்பாட்டு நிதி என்பது மக்கள் வருவாயிலிருந்து அரசுக்கு வரும் பணம். மக்கள் பணத்தை அரசு கொடுக்க, அந்த பணத்தில் ஒரு சிறு பகுதியை மீண்டும் அரசுக்கு கொடுத்திருக்கிறார். எம்.எல்.ஏ. தென்னரசு சுற்றி வளைத்தாலும் இது மக்கள் பணம் தாங்க...என நகைச்சுவையாக கூறுகிறார்கள் ஈரோடு அ.தி.மு.க.வினர்.

 

 

சார்ந்த செய்திகள்