Skip to main content

அதிகரிக்கும் கொரோனா தொற்று; ஈரோட்டில் ஒரே நாளில் 5 பேர் பாதிப்பு!

 

erode district covid infection rate increased issue 

 

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறையத் தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

 

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியலின் படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு மாதம் இல்லாத வகையில் ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 943 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

 

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 16 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது நாளொன்றுக்கு 80 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !