வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்துள்ள கண்டிக்காட்டு வலசு கிராமத்தில் முத்துசாமி (வயது 70) என்பவர் மண்சுவருடன் கூடிய கூரை வீட்டில் வசித்து வந்துள்ள்ளார். இந்நிலையில் நேற்றிரவு பெய்த மழையால் முதியவரின் வீட்டின் மண்சுவர், ஈரப்பதம் அடைந்து விழுந்துள்ளது. அப்போது வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த முத்துசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.