டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இருவரும் பிரதமர் மோடியை நாடாளுமன்ற அலுவலகத்தில் உள்ள பிரதமர் அறையில் சந்தித்துப் பேசினார்கள். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, "காவிரி, கோதாவரி நதிகள் இணைப்பது பற்றி பேசினோம்.தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தலில் பிரதமர் பிரச்சாரம் செய்ததற்கு அவருக்கு நேரில் நன்றி தெரிவித்தோம்" என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளாரே என்ற செய்தியளார்கள் கேள்வி எழுப்ப, அதற்கு நன்றி, வணக்கம் கூறி பேட்டியை நிறைவுசெய்தார் எடப்பாடி பழனிசாமி.
சசிகலா குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்... சாமர்த்தியமாக பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி!
Advertisment