
எண்ணூரில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பாலத்தின் தடுப்புச் சுவரைத் தாண்டி அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை எண்ணூர் நேதாஜி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ரவி பாட்ஷா. இவர் இன்று வழக்கம்போல் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் லாரியை எடுத்துக்கொண்டு கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலம் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பாலத்தின் தடுப்புச் சுவரின் மீது மோதி தலைக் குப்புற அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அத்திப்பட்டு தீயணைப்புத் துறையினர், லாரியில் அந்தரத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த ஓட்டுநர் ரவி பாட்ஷாவை ஏணி மூலம் மீட்டனர்.