Skip to main content

ஊழல் குற்றச்சாட்டு... சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியன் பணியிடை நீக்கம்!

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

bribe

 

ஊழல் புகாருக்குள்ளான சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியனை, தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பாண்டியனின் வங்கி லாக்கரை திறந்து சோதனையிடவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஊழல் புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியனின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டதில், (இரண்டு கணக்குகளில்) கணக்கில் வராத 1 கோடியே 37 லட்சம் ரூபாயை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். அதேபோல், 3 கிலோ வெள்ளிப்பொருட்கள், 10 கோடிக்காண சொத்து ஆவணங்களும் சிக்கின. பாண்டியனிடம் இருந்து அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், முறைகேடாக லஞ்சம் பெற்று அவர் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில், அவரை தமிழக அரசு, பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், பாண்டியனின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறையினர், பாண்டியன் கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.