
சென்னையில் ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், தேனாம்பேட்டை, வேப்பேரி உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. 6 வாகனங்களில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து இடங்களில் தனித்தனியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
வேப்பேரியில் ஈ.வி.கே.சம்பத் சாலையில் பிரின்ஸ் கார்டன் 11 வது தளத்தில் மகாவீர் இரானி என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதேபோல் ராஜா அண்ணாமலைபுரத்தில் செல்வராஜ் என்பவருடைய வீட்டில் சோதனையானது நடைபெற்று வருகிறது. தேனாம்பேட்டையில் கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜுன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆதவ் அர்ஜுனன் என்பவர் விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரத்தில் கியா கார் ஷோரூம் வைத்திருக்கும் அனீஸ் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.