
திண்டுக்கல் மாநகரில் உள்ள ராமர் பிள்ளை தோட்டம் பகுதியில் குடியிருந்து வருகிறார் லோடு மேன் வேலை பார்க்கும் குமார். இவரது மகன் அர்ஜுன் நாகல் நகர் ரவுண்டான பகுதியில் உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான பூக்கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் தான் இன்று மாலை வழக்கம் போல் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அர்ஜுனை சரமாரியாக அறிவாளால் வெட்டியது. உயிருக்கு பயந்து அர்ஜுன் அங்கிருந்து தப்பித்து ஓடியும் கூட அந்த மர்ம கும்பல் ஒடஒட விரட்டி அர்ஜுனை வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஒடி விட்டது.
இப்படி அந்த மர்ம கும்பல் அர்ஜுனை, தலை, கால், கை உள்ளிட்ட இடங்களில் 15 வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தான் அர்ஜுன். இந்த கொடூர சம்பவம் நகர் தெற்கு போலீசார் காதுக்கு எட்டியதின் பேரில் அர்ஜுனனின் உடலை கைபற்றி போஸ்ட்மாடத்திற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் திண்டுக்கல் நகரில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு அந்த கொலைகார கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.