elon musk had faced two assassination attempts in past eight months

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அங்குத் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இந்தத்தேர்தலில் தற்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்து, முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

Advertisment

இந்தநிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் காயமடைந்த டிரம்ப் பாதுகாப்பு அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நபரை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களில் 2 தன்னை கொல்ல முயற்சி நடந்ததாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “ஆபத்தான காலம் வரும், கடந்த 8 மாதங்களில் 2 முறை என்னைக் கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளது. இரண்டு நபர்கள் என்னைத் தனித் தனி சந்தர்ப்பங்களில் என்னைக் கொலை செய்ய முயன்றனர். டெக்ஸாசில் உள்ள டெஸ்லா தலைமையகத்திற்கு அருகில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.