elephant entered the government hospital premises

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய கிராமப் பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருவது சாதாரணமாக நடக்கும் நிகழ்வாகும். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் காட்டு யானை ஒன்று உலாவியது அங்கிருந்தோருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

Advertisment

சேரம்பாடி, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த கட்டை கொம்பன் என்ற அந்த யானை பந்தலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நுழைந்தது தெரிய வர, வனத்துறையினர் அதனை அடர் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர். இதற்கு முன்பே தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு போன்ற இடங்களில் சுற்றி வந்த கட்டை கொம்பன் யானை அண்மையில் அரசுப் பள்ளி கட்டிடத்தை சேதப்படுத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.