Published on 03/01/2020 | Edited on 03/01/2020
சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்க 2,636 சார்ஜ் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் 256 இடங்களில் பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் மையங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை, வேலூர், சேலம், தஞ்சை, ஈரோடு மாவட்டங்களில் சார்ஜ் மையங்கள் அமைக்கப்படவுள்ளது. அதேபோல் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் சார்ஜ் மையங்கள் அமையவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.