Electric shock on husband drying clothes; The wife who went to save also lost her life

துணி காயவைத்த கணவர் மீது மின்சாரம் தாக்கிய நிலையில்கணவனைக் காப்பாற்ற சென்ற மனைவி மீதும் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது மேல்சிறுவளூர் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் பைனான்ஸில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரளா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இன்று தனது வீட்டில் வாசிங்மிஷினில் துவைத்த துணியை காயவைக்க சென்றுள்ளார். அங்கு இரும்பு கம்பியில் துணி எடுத்து போடும் போது ராமு மீது மின்சாரம் தாக்கி உள்ளது. அவர் கத்தியுள்ளார். இதனைப் பார்த்த ராமுவின் மனைவி சரளா, தனது கணவரை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இதில் ராமு மற்றும் சரளா ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொதுமக்களால் அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக வடபொன்பரப்பி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment