Skip to main content

வாகன சோதனையில் பிடிபட்ட ரூபாய் 3 கோடியே 21 லட்சம்!

Published on 17/03/2021 | Edited on 17/03/2021

 

 

‘வழக்கமாகக் கொண்டு செல்வதுதானே?’ என்று அந்த வாகனத்தில் ரூபாய் 3 கோடியே 21 லட்சத்தைக் கொண்டு சென்றனர். உரிய ஆவணம் எதுவும் இல்லாமல் பணத்தை எடுத்துச் சென்றதால், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறவிருப்பதால், தேர்தல் ஆணையம், தமிழகம் முழுவதும் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 6 தேர்தல் பறக்கும்படையினர் வீதம் அமைத்து, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் 24 மணி நேர கண்காணிப்பில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். இன்று (17/03/2021) ஸ்ரீவில்லிபுத்தூர்- மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சோதனை மேற்கொண்டபோது, கனரா பேங்க், ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்.களில் பணம் வைப்பதற்காக வந்த வாகனத்தைச் சோதனையிட்டனர். அந்த வாகனத்தில், ரூபாய் 3 கோடியே 21 லட்ச ரூபாய், உரிய ஆவணம் இல்லாமல் இருந்ததால், பணத்தைப் பறிமுதல் செய்து, சீல் வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 


 

 

சார்ந்த செய்திகள்

 
`); });