Skip to main content

அறிவியல் சாதனை! பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு!

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
Appreciation for government school student


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிவியல் மற்றும் கணித   கண்காட்சியினை நடத்தி வருகிறது.
 


அந்த வகையில் புதுக்கோட்டை வருவாய் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற கண்காட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி மிரட்டுநிலை பள்ளி மாணவன் முகமதுஇஸ்மாயில் கார்பனின் மறுசுழற்சி என்ற தலைப்பில் படைப்புகளை தயார் செய்து காட்சிப்படுத்தி வைத்திருந்தார்.
 

அவரது படைப்பு புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்து மாநில போட்டிக்கு தேர்வானாது. பின்னர் கரூர் பரணி பார்க் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் 5 நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான கண்காட்சியில்  80 பேர் கலந்து கொண்டதில் மாணவன் முகம்மது இஸ்மாயிலின் படைப்பு 15 ஆவது இடத்தை பிடித்தது. பின்னர் மாநில அளவில் நடைபெற்ற கண்காட்சியில் சிறப்பிடம் பிடித்த  மொத்தம் 50 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு தென்னிந்திய அளவில்  செகந்திரபாத் சர்ஜோன் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்றன. இதில் மாணவன் முகம்மது இஸ்மாயில்  5 ஆவது இடம் பிடித்து சிறப்பிடம் பிடித்தார். 
 

மாணவன் முகம்மது இஸ்மாயிலுக்கு செகந்திராபாத்தில் உள்ள விக்னேஷ்வர் ஐயர் அருங்காட்சியத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் பதக்கம், புத்தகம்  வழங்கிப் பாராட்டியிருந்தனர்.
 

 எனவே தென்னிந்திய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்து தற்பொழுது பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்லும்  மாணவன்  முகம்மதுஇஸ்மாயில் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் செல்லப்பன் ஆகியோரை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கிப்  பாராட்டி வழி அனுப்பி வைத்தார்.


நிகழ்வின் போது அறந்தாங்கி கல்வி மாவட்ட மாவட்டக்கல்வி அலுவலர்( பொறுப்பு) கு.திராவிடச்செல்வம்,இலுப்பூர் கல்விமாவட்ட மாவட்டக்கல்வி அலுவலர் க.குணசேகரன் மற்றும் பலர்  உடன் இருந்தனர்.

 

 

 


   

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாணவர்கள் முதல் 100 நாள் பணியாளர்கள் வரை..; ஒரு லட்சம் பேர் புத்தகம் வாசிப்பு

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Lakhs of people read book in Pudukottai from students to 100 day workers

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 7 ஆவது புத்தகத் திருவிழா நடத்த ஆயத்தமாகி வருகிறது.

புதுக்கோட்டை 7 ஆவது புத்தகத் திருவிழா மாமன்னர் கல்லூரி வளாகத்தில் எதிர்வரும் 27 ஆம் தேதி தொடங்கி  ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான தலைப்புகளில் நூற்றுக்கணக்கான ஸ்டால்களில் புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளது. மேலும் கண்காட்சிகள், கவியரங்கம், கருத்தரங்கங்களும் நடக்கிறது. இதற்கான முன் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

புத்தகத் திருவிழாவை மாவட்ட மக்களிடமும், மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கும் விதமாகவும், "வாசித்தலை நேசிக்க வேண்டும்" என்பதற்காகவும் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் புத்தகம் வாசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 'புதுக்கோட்டை வாசிக்கிறது' என்ற தலைப்பில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா மாணவர்களுடன் அமர்ந்து புத்தகம் வாசிக்க, அதே நேரத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்கள், வாசிப்பை நேசிக்கும் புத்தகப் பிரியர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி வேலை நடக்கும் குளக்கரைகளில் நூறு நாள் பணியாளர்கள் என ஒரே நேரத்தில் லட்சம் பேர் வாசித்தனர்.

நூறு நாள் பணியாளர்களும் வேலைத்தலங்ளில் வாசிப்பதைப் பார்த்ததும் சில மூதாட்டிகள் "இதைப் பாக்கும் போது அறிவொளியில் பேரெழுத கத்துக்கிட்டது ஞாபகம் வருதுய்யா" என்றது நெகிழ வைத்தது.

Next Story

கள்ளக்குறிச்சி பள்ளி எரிப்பு வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Kallakurichi school incident case High Court action order

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் - செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி மர்மமான முறையில் மாடியில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார். இதற்கு நீதிகேட்டு பெரியளவில் போராட்டம் நடைபெற்றது. அது பள்ளிக்குள் கலவரமாக மாறியது. மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு ஸ்ரீமதி வழக்கு எனத் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில். “இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் இந்த விசாரணை நேர்மையான முறையில் நடைபெறவில்லை. பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கப்பட வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் இன்று (03.07.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை அடுத்து ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் 4 மாதங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த 4 மாதக்காலத்திற்குள் சிபிசிஐடி போலீசார் விசாரணையை முடிக்காவிட்டால் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடரலாம். பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும் புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தார்.