Published on 09/04/2021 | Edited on 09/04/2021

தமிழகம், கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவர் கடந்த மாதம் 11ம் தேதி, முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.