Skip to main content

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வதைத் தனித்தனியே சந்தித்துப் பேசிய அண்ணாமலை! 

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

Edappadi Palanisamy, Annamalai who met O. Panneerselvatai separately!

 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் பா.ஜ.க. நிர்வாகிகள் நேரில் ஆதரவு திரட்டினர். 

 

Edappadi Palanisamy, Annamalai who met O. Panneerselvatai separately!

 

அடுத்த மாதம் 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

 

Edappadi Palanisamy, Annamalai who met O. Panneerselvatai separately!

 

இந்த நிலையில், பா.ஜ.க.வின் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து, பொன்னாடைப் போர்த்தியும், பூங்கொத்து வழங்கியும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு திரட்டினர். இந்த நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தமபித்துரை எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

Edappadi Palanisamy, Annamalai who met O. Panneerselvatai separately!

 

அதைத் தொடர்ந்து, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சென்ற பா.ஜ.க.வின் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அவருக்கு பொன்னாடைப் போர்த்தியும், பூங்கொத்து வழங்கியும்  திரௌபதி முர்முவுக்கு ஆதரவு திரட்டினர். 

 

இந்த நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் மற்றும் ரவீந்திரநாத் குமார் எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'தமிழகம் உத்தரபிரதேசத்தை விட கீழே உள்ளது'- வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம்

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
'Tamilnadu is below Uttar Pradesh'- Vanathi Srinivasan reviews

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிர்கட்சிகள் பலரும் தங்களது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த நிர்வாகியும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பேசுகையில், ''சொத்து வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு என்பது திரும்பத் திரும்ப குறிப்பாக நடுத்தர ஏழை மக்கள் மீது மிகப்பெரிய சுமையை தமிழகத்தை ஆட்சி செய்யும்  திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. இந்த கட்டண உயர்வால் மின்சாரத் துறைக்கு 6000 கோடி ரூபாய் கூடுதல் வாரியாக கிடைக்கும் என சொல்கிறார்கள். ஆனால் இது முழுக்க முழுக்க எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் குறிப்பாக போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்து சேர்க்கின்ற போக்குவரத்து கட்டணம் என்பது கடுமையாக உயரப்போகிறது. இவை மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்கனவே இருக்கின்ற சுமை போதாதென்று இப்போது இந்த மின் கட்டண உயர்வால் அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுடைய விளையும் உயரப்போகிறது.

பல்வேறு விதங்களில் மக்களை பாதிக்கக்கூடிய இந்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை. நிதிச் சுமை என சொல்லும் தமிழக அரசு, ஜிஎஸ்டி வரிவசூலில் உத்தரபிரதேசத்தை விட கீழே உள்ளது. தமிழகத்தின் நிதி நிலைமை உயர்த்த சர்வதேச அளவில் இருக்கக்கூடிய நிதி விற்பனர்களை எல்லாம் வைத்து கமிட்டி போடுகிறோம் என்று முதல் பட்ஜெட்டில் அறிவித்தார்கள். இதுவரைக்கும் சர்வதேச முக்கியஸ்தர்கள், விற்பனர்கள் என்ன இந்த அரசுக்கு வழிகாட்டுதல் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தமிழக அரசு தான் இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கி இருக்கின்ற அரசு'' என்றார்.

Next Story

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
ADMK former minister MR. Vijayabaskar arrested

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர்' என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதனால் தொடர்ந்து தலைமறைவாக  இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வந்தனர். இதனால் கடந்த 2 ஆம் தேதி (02.07.2024) மீண்டும் ஒரு முன்ஜாமீன் மனுவைக் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சண்முகசுந்தரம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து முன்ஜாமின் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் அவரது சகோதரரும் சேகரும் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் நில மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கேரளாவில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை தனிப்படை போலிசார் கைது செய்துள்ளனர்.