வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
2019-20 பட்ஜெட் தாக்கலுக்கு பின் இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று தமிழக சட்டப்பேரவை கூடியது. இந்த கூட்டத்தில் பிப் 13 ஆம் தேதி வரை நடைபெறும் பட்ஜெட் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பேசுவார்கள். துணைமுதல்வரும், முதல்வரும் பிப் 14 ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்தில் பதிலளித்து பேசுவர்கள் என கூறப்பட்ட நிலையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வறுமை கோட்டிற்கு கீழுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும். இதற்கு 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் எனவும் எடப்பாடி தெரிவித்தார்.