இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் 1986ஆம் ஆண்டு ஒஎன்சிசி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு 1992ம் ஆண்டு 15க்கும் மேற்பட்ட கிணறுகள் அமைத்து எரிவாயு எடுத்தனர். அப்போது இருந்து அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் திருப்புல்லாணி சுற்றியுள்ள பகுதிகளான காஞ்சிரங்குடி,கொட்டகுடி ஆறு,போன்ற பகுதிகளில் மேலும் 16 கிணறுகள் அமைத்து எரிவாயு எடுக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் நேற்று திருப்புல்லாணி அருகே உள்ள வலையனேந்தல் இந்திராநகர் பகுதியில் 50க்கும் மேற்ப்பட்ட காட்டுநாயக்கர் சமுகத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள ராசமணி,காளீஸ்வரி ஆகியோர் வீட்டில் முதலில் சிறிய விரிசல் ஏற்பட்ட உடனே வீட்டை விட்டு வெளியே வந்தனர். அந்த விரிசல் மேலும் அகலமாக வீட்டிலிருந்த பொருட்கள் கீழே விழந்தன. இதையடுத்து அப்பகுதி உள்ள பொதுமக்கள் கையில் கிடைத்த பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பொதுஇடத்தில் தஞ்சமடைந்தனர். இப்பகுதியில் 4 இன்ஞ்ச் அகலத்திற்கு 17 இடங்களில் 10 அடி முதல் 100 அடி நீளம் வரை விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறைக்கும், வருவாய்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்து பார்வையிட்ட கீழக்கரை டி.எஸ்.பி ரவீச்சந்திரன் மற்றும் கீழக்கரை தாசில்தார் ராஜேஸ்வரி உடனே மாவட்ட கனிமவளங்கள் துறை அதிகாரி சுகிதா ரஹீமாக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அதிகாரி அப்பகுதியை பார்வையிட்டவரிடம் பத்திரிக்கையாளர்கள் என்ன காரணத்தினால் விரிசல் ஏற்ப்பட்டது என கேட்டபோது, அருகில் இருந்த துணைவட்டாட்சியர் ஜலால் அவரிடம் கேட்ட வேண்டாம் சிறிது நேரம் பொறுங்கள் நான் கூறுகிறேன் என்று பத்திரிக்கையாளர்களை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்.
இப்பகுதியை சேர்ந்த ராசமணி, காளீஸ்வரி கூறுகையில் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை,இதுமத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் எங்களால் ஒன்னும் செய்ய முடியாது என்று மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. செவிடன் காதில் ஊதிய சங்காய் மத்திய அரசு உள்ளது. இரவு நேரங்களில் பயமுறுத்தும் சத்தங்கள் கிணறுகளிலிருந்து வருவதால் நாங்கள் தினம்தினம் ஒருவித பயத்துடன் தூங்குகிறோம்.எப்பொழுது என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்றனர்.
இதுபற்றி மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் யாரும் பீதியடையவேண்டாம், அதிகாரி அப்பகுதியை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்கிறது.
- பாலாஜி