Skip to main content

ஸ்ரீரங்கம் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

Durga Stalin at Trichy Samayapuram temple!

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று காரில் சென்னையில் இருந்து திருச்சி வந்தார். பின்னர் அவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இரவு 7.20 மணிக்கு சென்று தரிசனம் செய்தார். 

 

இதன்பிறகு திருச்சிக்கு வந்து சேர்ந்த அவர், இன்று காலை ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தை கண்டார். காலை 10 மணிக்கு மேல் வந்து தரிசனத்தை முடித்துவிட்டு சென்றார். அதன்பிறகு வெக்காளியம்மன் கோவிலுக்குச் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், அவருடன் நகர்ப்புற வளரச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மனைவி மற்றும் 2 மகள்களும் இருந்தனர். 

 

சார்ந்த செய்திகள்