Advertisment

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திமுகவின் மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல், டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ, நக்கீரன் பொறுப்பாசிரியர் லெனின், மகேந்திரன், துரை வைகோ, மல்லை சத்யா, ஜீவன், மருதநாயகம் உள்ளிட்டோர் கலைஞர் சிலைக்கு மரியாதை செய்தனர்.