Drunken person who attacked police inspector in trichy

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தை ஒருவர் தீயிட்டுக்கொளுத்துவதாக சோமரசம்பேட்டை போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உதவி ஆய்வாளர் கார்த்திக் உள்ளிட்ட போலீசார், ஜூனியர் சாந்த குமார் என்பவர் மது போதையில் வாகனத்தைக் கொளுத்த முயன்றபோது அதை தடுத்து நிறுத்தி விரட்டியுள்ளனர்.அப்போது போதையில் இருந்த சாந்தகுமார், காவல் ஆய்வாளர் கார்த்திகை கத்தியால் குத்தியுள்ளார்.

Advertisment

Drunken person who attacked police inspector in trichy

மேலும், அருகில் இருந்த பொதுமக்கள் போதையில் இருந்த சாந்தகுமாரை தாக்கியதில் அவரும் காயமடைந்தார். இந்நிலையில், இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisment