கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கஸ்பா தெருவில் வசித்து வருபவர்கள் செல்வம்- தேவி தம்பதியினர். கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் 10 வயது கொண்ட இரண்டாவது பையனான ஜெய், ஆறு வயது முதல் ஒவ்வொரு நிமிடமும் பெட்ரோலின் வாசனையை பிடித்து போதை மயக்கத்தில் வாழ்ந்து வருகிறார். சிறு வயது முதல் ஜெய் தனது அப்பாவின் இருசக்கர வாகனத்தில் முன்புறம் அமர்ந்து செல்லும்போது, பெட்ரோல் டேங்கில் வரும் வாசனையை பிடித்து கொண்டும், இரு சக்கர வாகனம் பெட்ரோல் இல்லாமல் நிற்கும் போது, பெட்ரோல் டேங்கில் ஜெய்யை ஊத சொல்லி பழக்கப்படுத்தியுள்ளனர். அப்போது பெட்ரோல் வாசனையில் வரும் போதையில் தள்ளாடிய சிறுவன் ஜெய் தொடர்ந்து, 5 வருடமாக அவ்வாசனையை பிடித்து போதை மயக்கத்தில் வாழ்ந்து வருகிறார்.
பெட்ரோலின் போதை பழக்கத்துக்கு அடிமையான ஜெய்யின் செயல்பாட்டை அறிந்த பெற்றோர்கள் பலமுறை கண்டித்தும், எச்சரிக்கை செய்து பார்த்தும், கேட்காத சிறுவன் ஜெய் போதை மயக்கத்தில் கற்களாலும், பெற்றோர்களிடம் சண்டையிடுவதுமாக இருந்துள்ளார் என்று அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். சுமார் ஜந்து வருடங்களுக்கு மேலாக பெட்ரோலின் வாசனை மூலம் போதை பழக்கத்தில் ஈடுப்பட்டு வரும் தனது மகனை மீட்க வேண்டும் என்று ஏழ்மையில் உள்ள பெற்றோர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் போதிய பணம் இல்லாததால் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். மேலும் பெட்ரோல் வாசனையை மிகவும் பிடித்ததால் தொடர்ச்சியாக ஜந்து வருடங்களாக வாசனையை பிடித்துக்கொண்டு இருப்பதாகவும், தான் இந்த பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சித்தும் முடியவில்லை என்று சிறுவன் ஜெய் கூறுகிறார்.
தனக்கு பெட்ரோலின் வாசனை பிடித்து போனதால், பெட்ரோலை இருசக்கர வாகனத்தில் இருந்து எடுத்து, பாட்டில்களில் நிரப்பி போதை மயக்கம் தெளிந்த பின், வாசனை பிடித்து கொள்வேன் என்று கூறுகின்றார். எப்போதும் பெட்ரோலை பாட்டிலில் நிரப்பிக்கொண்டு, போதையில் தள்ளாடும் 10 வயது கொண்ட சிறுவனை மீட்டு தரக்கோரி, ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர். பெட்ரோலின் வாசனையால் சரிவர உணவு அருந்துவதில்லை என்றும், பள்ளிக்கு செல்வதில்லை என்று கூறும் பெற்றோர்கள், தனது மகனை காப்பற்றவதற்கு அரசு மூலமாகவோ, தன்னார்வ தொண்டு மூலமாகவோ உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றனர்.