Drug Awareness Program!

திருச்சி மாவட்டம், தில்லைநகர் கி.ஆ.பெ. மேல்நிலைப்பள்ளியில் சட்டவிரோத போதைப்பொருள் புழக்கம் மற்றும் உபயோகத்திற்கு எதிரான சர்வதேச தினம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பள்ளி தலைமை ஆசிரியை லதா தலைமையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Advertisment

இந்த கூட்டத்தில் சைபர் செல் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் சிந்துநதி, கலந்துகொண்டு தனது உரையில் போதைப் பொருளினால் ஏற்படும் பிரச்சனைகள், போதைப் பொருளினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீட்பதில் மாணவர்களின் பங்கு குறித்துப் பேசினார். மேலும், சட்டவிரோத போதைப் பொருள் குறித்தான புகார்கள் அளிக்க 10581 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் பேசினார்.

Advertisment

சமூகப் பாதுகாப்புத்துறை குழந்தை நலக்குழு உறுப்பினர்கள் பிரபு, நேத்தலிக், சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டு, போதைப்பொருளினால் பாதிப்பு ஏற்படக்கூடிய குழந்தைகளுக்கு மறுவாழ்வு இல்லங்கள் எவ்வாறு, எங்கு செயல்படுகிறது என்பது குறித்த சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் மாணவர்களுக்குத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழி அனைவராலும் எடுத்துக்கொள்ளப்பட்டது.