Skip to main content

அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம்

Published on 23/09/2022 | Edited on 23/09/2022

 

Driving License for Govt Arts College Students

 

காட்டுமன்னார்கோவிலில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு இரு பாலர் மாணவ மாணவிகளும் கல்வி பயின்று வருகிறார்கள். மாணவ மாணவிகள் தினம் தோறும் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து செல்வதால் பல பேருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை.

 

இந்த நிலையில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், ஆய்வாளர் விமலா ஆகியோர் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று கல்லூரியில் உள்ள ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர்.

 

இந்த நிலையில் ஓட்டுநர் உரிமம் பெற தகுதியான 48 மாணவ மாணவிகளுக்கு இணையவழி மூலம் பணம் செலுத்தப்பட்டு அவர்களுக்கு இருசக்கர வாகனத்தை தயக்கமில்லாமல் ஓட்டும் வகையில் பயிற்சி அளித்து போக்குவரத்து விதிகள் கூறப்பட்டது.  அதனடிப்படையில் சிதம்பரம் அருகே சி முட்லூர் கிராமத்தில் உள்ள சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 48  மாணவ மாணவிகளுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து வட்டார அலுவலர் மற்றும் ஆய்வாளர் ஓட்டுநர் உரிமத்தை மாணவர்களுக்கு வழங்கினார்கள்.

 

ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக் கொண்ட மாணவ மாணவிகள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான கட்டணம் கட்ட கூட முடியாத சூழ்நிலையில் கல்லூரி ஆசிரியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உதவியதின் பேரில் தற்போது ஓட்டுநர் உரிமம் கிடைத்துள்ளதாகவும். இனிமேல் சாலை விதிகளை கடைப்பிடித்து வாகனங்களை இயக்குவோம் என்றும் இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர். மேலும் ஒவ்வொரு கல்லூரியிலும் சென்று இதுபோல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் வரவேற்பு பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவலர்கள் தாக்குதலால் டிரைவர் மரணம்? மக்களின் போராட்டத்தால் தென்காசியில் பதற்றம்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi
வேன் டிரைவர் முருகன்

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்குபுதூரைச் சேர்ந்த வேன்டிரைவர் முருகன் கடந்த மார்ச் 8 அன்று (மஹாசிவராத்திரி) அச்சம்பட்டியிலிருந்து பொது மக்களை வேனில் ஏற்றிக் கொண்டு பஞ்சஸ்தலங்கள் செல்வதற்காக சங்கரன்கோவில் டவுண் பஜார் வழியாக வந்திருக்கிறார். அதுசமயம் எதிர்பாராத விதமாக வேன் முன்னே சென்ற ஆட்டோ ஒன்றில் மோதியதால், வேன்டிரைவர் முருகனும் ஆட்டோ ஓட்டுனரும் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் மெயின் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நகர முடியாமல் நீண்ட தொலைவிற்கு ப்ளாக் ஆகியது போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் சம்பவ இடம் வந்தவர்கள் முருகனை தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மயக்கமடைந்த முருகனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையறிந்த முருகனின் உறவினர்கள் சங்கரன்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இரவு முழுக்க சாலை மறியலில் ஈடுபட்டனர்.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

போலீசார் தாக்கியதால்தான் முருகன் இறந்ததாகக் கூறி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்திவருகின்றனர். சம்பவத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அது வரை உடலை வாங்கப் போவதில்லை என்று கூறி அவரது உறவினர்கள் வடக்குபுதூர் கிராமத்தில் 6வது நாளாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உடன் மார்க்சிஸ்ட் கட்சியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டதன்படி மார்ச் 13 அன்று சங்கரன்கோவில் நகரின் தேரடித் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்துகிற வகையில் காலை 10.30 மணியளவில் நகரைச் சுற்றியுள்ள வடக்குபுதூர், காந்திநகர், அச்சம்பட்டி, புளியம்பட்டி நெடுங்குளம், அழகாபுரி, சீவலராயநேந்தல், அழகுநாச்சியார்புரம், அழகநேரி என 32 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பங்கேற்றனர். அதுசமயம் ஒரு பகுதியினர் நகரின் முக்கியத் தடுப்புகள், தடைகளைப் போட்டு வாகனங்களைத் தடுத்தும் மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் காரணமாக பாதுகாப்பு பணிக்கென்று போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் நகரம் இறுக்கமானது. இதனிடையே சங்கரன்கோவில் அருகேயுள்ள மருதப்பபுரம் கிராமத்தில் எதிர்பாராத வகையில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்ததால் அதனை அணைக்கிற வகையில் அந்த வழியாக வந்த சங்கரன்கோவிலின் தீயணைப்பு நிலைய வாகனத்தை நகருக்குள் விடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்க தீயணைப்பு வாகனம் வேறு வழியாகச் சென்றது.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

நேரம் செல்லச் செல்ல வேறு சில பகுதிகளிலிருந்தெல்லாம் மக்கள் பிரதானச் சாலையை நோக்கி திரண்டு வர அது சமயம் அந்தப் பகுதியிலிருந்த கடைகளை அடைக்கச் சொல்லி கற்களை வீசவே, பதற்றமடைந்த வியாபாரிகள் பீதியில் கடைகளை அடைத்தனர்.  ஆபத்தான நிலையை அறிந்த தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமார் மறியல் நடந்த பழைய பேருந்து நிலைய பகுதிக்கு வந்தவர் அவர்களை சமாதானப் படுத்தியிருக்கிறார். ஆனாலும் ஒரு பகுதியினர் அவரைச் சூழ்ந்து கொண்டவர்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்து செல்ல விடாமல் முற்றுகையிட்டனர்.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

தொடர்ந்து அவர்களிடம் பேசிய எஸ்.பி, முருகன் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதாக கூறியவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மறியல், ஆர்ப்பாட்டம் என நகரம் துண்டிக்கப்பட, சுற்றுப்பட்டுக் கிராமங்களிலோ, பதற்றமும் பரபரப்பும் இறங்கியபாடில்லை.

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.