Skip to main content

கழிவுநீர் கலந்த குடிநீர்; உயிரிழந்த 11 வயது சிறுவன்

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
drinking water mixed with sewage; The deceased was an 11-year-old boy

சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை அபீத் காலனி பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததாக 11 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சிறுவனின் சகோதரியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியின் துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட தண்ணீரை பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்ற வருகிறது. துர்நாற்றத்துடன் குடிநீர் வருவதாக ஏற்கனவே அந்த பகுதி மக்கள்  புகார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 11 வயது சிறுவன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சென்னை இளைஞரின் செயல்; பாய்ந்தது புதிய குற்றவியல் சட்டம்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Bathing video incident;  Chennai Youth Arrested Under New Penal Code

ஜூலை ஒன்றான நேற்று முதல் நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முதன் முதலாக டெல்லியில் பாதசாரியில் கடை வைத்திருந்த நபர் மீது பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் முதன்முறையாக இளைஞர் மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் வீட்டுக்கு அருகில் உள்ள பெண் குளித்துக்கொண்டிருந்ததை வீடியோ எடுத்த புகாரில் 'பாரதிய நியாய சன்ஹீதா' சட்டத்தின் படி போலீசார் கைது செய்துள்ளனர். சாரதி என்ற அந்த நபருக்கு பழைய சட்டப்பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல், அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய சட்ட பிரிவிலும் அதே தண்டனை குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இருப்பினும் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து தண்டனை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

போதைப்பொருள் கடத்தல்; 9 பேர் கைது 

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
9 people arrested incident

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இருவேறு இடங்களில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், 4.17 கிலோ கிராம் கொண்ட மெத்தபட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 9 பேரில் 3 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் என்பதும் எனத் தெரியவந்துள்ளது. மேலும் சென்னை ராயப்பேட்டை அருகே போதைப் பொருள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே சமயம் சென்னை சென்ட்ரல் வந்த பூரி வாராந்திர விரைவு வண்டியில் இருந்த பயணிகளிடம் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். ரயில் பயணிகளைச் சோதனை செய்த போது ஒடிசாவைச் சேர்ந்த சரோஜினி, நளினி என்ற இரு பெண்களைக் கைது செய்துள்ளனர்.