



சென்னை, கண்ணகிநகர் அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் கண்ணகி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று (15.01.2021) டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக மாணவர்களுக்குப் பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நேற்று நடந்த நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஜெ. 11 காவல் நிலைய ஆய்வாளர் ஆல்ஃபின் ராஜ் வருகை தந்து பரிசுகளை வழங்கினார். குறிப்பாக இந்நிகழ்ச்சியில் பரிசுகளாக இயற்கை முறையில் விதைகளுடன் தயாரிக்கப்பட்ட எழுதுகோல், நோட்டு மற்றும் ஆத்திச்சூடி போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டன.
