
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பாக ஒரு சுற்றறிக்கையானது அனைத்து மாநகர போக்குவரத்து பணிமனை நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மாநகர பேருந்தில் பயணிக்க கூடிய பயணிகளிடம் உரிய சில்லறையை வழங்க வேண்டும் என நடத்துநர்கள் நிர்ப்பந்திக்க கூடாது. அது தொடர்பாக பயணிகளிடம் சண்டையிடக்கூடாது. சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து பயணிகளுடன் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பயணிகளிடம் சில்லறை கேட்டு வாங்குவதில் விவாதம் நடந்ததாக பயணிகள் தரப்பிலிருந்து பல்வேறு இடங்களில் புகார்கள் எழுந்த நிலையில் இந்த சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது. இதன் பிறகு இது போன்ற புகார்கள் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)