கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க மார்ச் 22ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி.
நகரங்களில் இதனை மக்கள் சரியாக கடைப்பிடிப்பார்கள். ஆனால் கிராமங்களில் மக்கள் கடைப்பிடிப்பார்களா என்கிற கேள்வி பல தரப்பிலும் எழுந்துள்ளது. எல்லா மக்களும் அதனை கடைப்பிடிக்க வேண்டும்மென பல தலைவர்களும் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி, சிக்கினாகுப்பம், அழிஞ்சிகுளம் உட்பட 6 ஊராட்சிகளில் வாழும் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், கடைகளை திறக்க வேண்டாம், பொதுமக்கள் வேலைக்கு செல்ல வேண்டாம், வீட்டிலே இருக்க வேண்டும் என ஆட்டோ மூலம் ஒலிபெருக்கி வைத்து கொண்டு சில மனித நோயம் கொண்ட சமூக சேவகர்கள் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.