Skip to main content

பாஜக தமிழ் மொழியை நசுக்கப் பார்கிறதா? ஜெயக்குமார் ஆவேச பதில்!

Published on 19/03/2018 | Edited on 19/03/2018


உலகின் மூத்த மொழியான தமிழை யாராலும் அழித்துவிட முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்,

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக தமிழ் மொழியை நசுக்கப் பார்ப்பதாக ராகுல்காந்தி கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. தமிழ் மொழியை யாராலும் அழித்துவிட முடியாது. உலகின் மூத்த மொழியான தமிழ், உலகம் உள்ளவரை தழைத்தோங்கும்.

கே.சி. பழனிச்சாமி நீக்கத்தின் பின்னணியில் யாரும் இல்லை. கட்சியின் கொள்கையை மீறும் விதத்தில் பேசியதால்தான், அவர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அ.தி.மு.க. விதியை மீறி பேசினால் மாலையா போட முடியும்? இந்த விஷயத்தில் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது.

மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்தே தீருவோம் என அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தற்காலிக சபாநாயகர் நியமனம்; காங்கிரஸ் எதிர்ப்பு

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Appointment of Temporary Speaker; Opposition to Congress

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பாஜக தலைமையிலான கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது மக்களவையின் தற்காலிக சபாநாயகர் குறித்த உத்தரவை இந்திய குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அறிவிப்பின்படி மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் எனவும், எம்பிக்கள் பதவியேற்ற பிறகு மக்களவையின் புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதேநேரம் தற்காலிக சபாநாயகர் நியமனத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் நாடாளுமன்ற விதிகளை பாஜக மீதியுள்ளது என தெரிவித்துள்ள காங்கிரஸ், சபாநாயகர் தேர்தலுக்கு முன் மூத்த எம்.பி தான் அவைக்கு தலைமை தாங்க வேண்டும் என்பது விதி. 8 முறை எம்பியாக இருந்த காங்கிரசின் கொடி குன்னிலை நியமிக்கவில்லை. தற்காலிக சபாநாயகராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பர்த்ருஹரி மஹ்தப்  ஏழு முறை மட்டுமே எம்.பியாக இருந்தவர் என காங்கிரஸ் விமர்சனத்தை வைத்துள்ளது.

Next Story

“அரசும், அரசியலும் வேறாக இருக்க வேண்டும்” - ‘இந்து’ என்.ராம்  

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
 hindu n ram Interview about modi and bjp

இந்தியாவில் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர், பல நாடுகளுக்கு பயணித்து பத்திரிகையாளராக பணிபுரிந்தவர். மரியாதைக்குரிய என்.ராம் அவர்களை நக்கீரன் சிறப்பு பேட்டிக்காக சந்தித்தோம். நம்முடைய கேள்விகளுக்கு பல்வேறு சுவாரசியமான தகவலை, தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. இந்திய பாராளுமன்றத் தேர்தல் உலக அளவில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெருகிறது?

முக்கியமான ஒரு லோக்சபா எலெக்சன் நடந்து முடிந்திருக்கிறது. 970 மில்லியன் தகுதிவாய்ந்த வாக்காளர்கள் இருந்த தேர்தலில் 61 சதவிகிதம் வாக்களித்திருக்கிறார்கள். இது ஒரு பெரிய விசயம் தான். அயோத்தியில் உள்ள பைசாபாத், மற்று உத்திரப்பிரதேசத்தில் சில தொகுதிகளிலும் பாஜக தோற்றிருப்பது தான் இந்தத் தேர்தலில் குறிப்பிடும்படியான ஒரு விசயமாகும்.

ஸ்டாலின் இஸ் மோஸ்ட் டேஞ்சர் தென் கருணாநிதி என்ற ஸ்டேட்மெண்ட்டைப் பற்றி?

பாஜகவைப் பொறுத்தவரை அவங்களுக்கு மோஸ்ட் டேஞ்சரஸாக ஸ்டாலின் இருக்கலாம். முன்பு எம்ஜிஆர் இருந்தாரு, அப்புறம் ஜெயலலிதா இருந்தாங்க,  பாஜகவில் தமிழகத்தில் அப்டி யாரு இருக்காங்க, தமிழக பாஜக தலைவரா? அவரை நான் ஜோக்கர்னு தான் சொல்வேன். மீடியாவை மதிக்க மாட்டாரு, மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவாரு, அண்ணாமலை கடுமையா வேலை செஞ்சாருதான், ஆனால் அசிங்கமாக பேசுறாரு. அதனாலதான் நானும், நக்கீரன் ஆசிரியரும் சேர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.

தமிழக பாஜக தலைவர் கோயம்புத்தூரில் ஏன் நின்னாருன்னு தெரியலை, அவருக்கு யாரோ உள்ளுக்குள் இருந்த எதிரி தான் நிறுத்தி வச்சிருக்காங்க, எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம் ஜெயிக்க மாட்டாருன்னு, ஆனால், நிறையா பணம் செலவழிச்சு இரண்டாவது இடத்திற்கு வந்துட்டாரு. அவர் ஒன் மேன் ஷோ போல கட்சியை நடத்தினார். உண்மை என்னவெனில் அவரோ, மோடியோ ஒன் மேன் ஷோவாக கட்சியை நடத்த முடியாது. அவங்க ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கிரியேசன்கள் தான். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது தானே பிஜேபி. அந்த இயக்கம் இல்லையெனில் இவங்க ஜீரோ தான்.

இரண்டு முறை ஆட்சி அமைத்தும், பெரிய விமர்சனங்கள் இருந்தும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து விட்டார்கள் இதை வீழ்ச்சி என்று எப்படி சொல்ல முடியும்?

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் இது பிஜேபிக்கு இது தோல்வி தான். 400 தொகுதிகள் வெற்றி பெறுவோம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அவ்வளவு வரவில்லையே. அது தோல்வி தானே. பாஜகவின் மெஜாரிட்டியை விட 32 சீட் குறைவு. 2014 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வந்தார்கள். அப்போது இந்தியாவின் வளர்ச்சி பற்றி பேசினார்கள். 2019-ல் முந்தைய தேர்தலை விட அதிக பெரும்பான்மையுடன் வந்ததால், கூட்டணியை எல்லாம் கண்டுகொள்ளாமல் மோடியும், அமித்ஷாவும் தான் அனைத்து முடிவுகளையும் எடுத்தனர்.

தேர்தல் வந்ததும் எதிர்க்கட்சி தலைவர்களை, முதல்வர்களை கைது செய்வது என பல வேலைகளை செய்தார்கள். பத்திரிக்கை சுதந்திரத்தை தடுத்தார்கள், பல பத்திரிகையாளர்களை கைது செய்தார்கள். 2014-க்கு பிறகு 14 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களெல்லாம் அரசின் ஊழலை வெளிக்கொண்டு வந்த மீடியாவைச் சேர்ந்தவர்கள். இதையெல்லாம் நியூயார்க்கை மையமாகக் கொண்டு செயல்படும் இயக்கம் டாக்குமெண்டரியாக வெளியிட்டு இருக்கிறது.

பாராளுமன்ற விவாதங்களுக்குள்ளேயே கொண்டு வராமல் காஸ்மீர் மாநிலத்தை உடைத்து லடாக் தனியான யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். சிஏஏ கொண்டு வந்தார்கள். விவசாயிகளின் போராட்டத்தை கடுமையாக நசுக்கினார்கள், ஆனால் அதில் தோற்றுப் போனார்கள். அதனால் அந்த சட்டங்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். மோசமான எதேச்சதிகாரப் போக்கு இருந்தது, இப்போது அது அடிவாங்கி இருக்கிறது. இப்ப மெஜராட்டி இல்லாமல் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவோட ஆட்சி அமைக்கிறாங்க.

ஒரு கூட்டணியிலிருந்து இன்னொரு கூட்டணிக்கு போவதில் நிபுணர்கள் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும். சில சமயம் தப்புக் கணக்கு போட்டு தோற்றும் விடுவார்கள். 2020 அக்டோபரில் இந்தியா கூட்டணி உதவியுடன் ஆட்சியமைக்கிறார் நிதிஷ்குமார், பிறகு, என்டிஏ கூட்டணி பக்கம் போயிட்டாரு, எப்படி வேண்டுமானாலும் பல்டி அடிக்கக் கூடியவர். சந்திரபாபு நாயுடு திறமையான அரசியல்வாதி, அமித்ஷா இவரை மாமனாருக்கு முதுகில் குத்தி துரோகம் செய்தவர்னு கடுமையா விமர்சித்திருக்கிறார். ஆனால், இன்று இருவரின்  தயவால் தான் ஆட்சி அமைக்கிறார் மோடி, இதை மோடி 3 என்று கூட சொல்ல முடியாது. மோடி 2.5 என்று தான் சொல்ல வேண்டும்.

பிஜேபி அரசு செய்த அரசியல் சேதாரங்கள் பற்றி சொன்னீங்க, அதில் எதை பெரிய சேதாரமாக பார்க்கிறீர்கள்?

மிகப்பெரிய டேமேஜ்களை ஒன்று மட்டும் சொல்ல முடியாது. நிறையா விசயங்களை இணைத்து தான் சொல்ல முடியும். இன்ஸ்டிடியூசன்களை மானிபுலேட் பண்ணியது குறிப்பாக சுப்ரீம் கோர்டின் மீது அழுத்தம் கொடுத்தது, எலெக்சன் கமிஷனை சுதந்திரமாக செயல்படாமல் தடுத்தது. ஆனாலும் பெரிய அளவிலான கலவரங்கள் இல்லாமல், வேறெந்த பிராடுத்தனமும் இல்லாமல் நடந்து கொண்டதே பெரிய சாதனை தான். திருட்டுத்தனமாக சில விசயங்கள் செய்வார்கள் என்று விமர்சித்தார்கள் அதெல்லாம் இல்லை. நேர்மையாகத் தான் நடந்து கொண்டார்கள்.

எதிர்க்கட்சிகளின் பொருளாதார நிலையை கடுமையான ஒடுக்கினார்கள். சுதந்திர இந்தியாவில் இது போன்று இதற்கு முன்பு நடந்ததே இல்லை. சிபிஐ, இன்கம்டேக்ஸ், மத்திய காவல் படை, ஆகியோர்களை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை எல்லாம் முடக்கினார்கள். மதவெறியை தூண்டியது மிக முக்கியமாக இவர்கள் செய்த டேமேஜ், 20 கோடி மக்களைக் கொண்ட முஸ்லீம்களை தாக்கினார்கள். இந்து மத வெறியை தூண்டி விடுவதே இவர்களின் அரசியல் செயல்பாடாக பார்க்கிறார்கள்.

அயோத்தியில் கோவில் திறந்ததே மதவெறி அரசியல் தான் எனும் போது, வேறு எந்த விளைவுகளெல்லாம் இவர்களது சாதகமாகவும், பாதகமாகவும் அமைந்தது?

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நூறு வருட திட்டம் இந்து மத வெறியை தூண்டு விட்டுக் கொண்டே இருப்பது. 1990களுக்கு பிறகு பிஜேபி வந்ததும் ராமஜென்ம பூமி அரசியலை கையில் எடுத்தார்கள். மசூதிகளை திட்டமிட்டு சேதாரம் செய்ய நினைத்திருக்கிற அஜெண்டா கூட அவர்களிடம் உள்ளது. இதெல்லாம் பெரிய அளவிலான பாதிப்பு தான். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை ஒரு போதும் மாற்ற முடியாது. 

அரசும், அரசியலும் வேறாக இருக்க வேண்டும் அதாவது கோவில்களும் அரசாங்கமும் வேறு வேறாக இருக்க வேண்டும். அரசியலும் மதமும் வேறாக இருக்க வேண்டுமே தவிர அவற்றை கலக்க கூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அதுக்கு நேர் மாறாக தான் செயல்பட்டு இருக்கிறார்கள். பிரதமர் ஒரு கோவிலுக்கு வழிபடப் போவதை விட, இவரே பூஜை செய்பவராகவும் மாறியே இருந்தார். ஆச்சாரமாக இருக்கிற கோவில்களுக்கு பூஜை செய்பவர்களுக்கு இவர் பூஜை செய்ய முன் வந்தது சுத்தமாக பிடிக்கவில்லை. 

இவர் ஏன் விவேகானந்தர் மணிமண்டபத்தில் போய் தியானம் செய்கிறார். இண்டலிஜெண்ட்ஸ் எலெக்சன் ரிப்போர்ட் சொல்லி இருப்பார்கள். எக்ஸிட் போல் வேறு மாதிரி வந்தது. ஆனால் அது எந்த விதத்திலும் ரிசல்டை பாதிக்கவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. இதைத்தான் இப்போது ராகுல்காந்தி கேள்வி எழுப்புகிறார். நீங்களே உங்களுடைய ஸ்டாக்கை வாங்குனீர்களா? விற்றீர்களா? உங்களுடைய நண்பர்களைக் கொண்டு வாங்க வைத்தீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்.

ஒரு பிஎம்மும், ஹோம் மினிஸ்டருமே ஸ்டாக் வாங்குங்க என்று மக்களுக்கு பரிந்துரை செய்தார்களே?

அது ரொம்ப தப்பான விசயம். இவர்களை செபி கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஜாயின்ட் பார்லிமெண்டரி கமிட்டி ராகுல்காந்தி கேள்வி கேட்டிருக்கிறார். மீடியா இதை இன்வஸ்டிகேசன் செய்யலாம். இண்டர்பெர்க் பண்ணியது போல செய்யலாம். பிசினஸ் மீடியா ஸ்டாக் மூவ்மெண்ட்ஸ் பற்றி அனலைஸ் பண்ணலாம். செய்வார்கள் என்று நினைக்கிறேன்.