Skip to main content

சமூக வலைத்தளங்களில் படங்களை பதிவேற்றம் செய்யாதீர் பெண்களே...- எச்சரிக்கும் கோவை சைபர் கிரைம்! 

Published on 20/06/2021 | Edited on 20/06/2021

 

Do not upload pictures on social networking sites ladies ...- Warning from Covai Cyber ​​Crime!

 

ஊரடங்கை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் வேலை வாங்கித் தருகிறோம் அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என ஏமாற்றி பணம் பறிப்பது போன்று நிறைய ஆன்லைன் குற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில், அது மாதிரியான அழைப்பை துண்டித்து விட வேண்டும் என கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார்  எச்சரித்துள்ளனர். 

 

மேலும், பெண்கள் தங்கள் புகைப்படங்களை வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யாதீர்கள்.  அப்புகைப் படங்களை வைத்து மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்ட வாய்ப்புண்டு. அதற்கு இடமளிக்க வேண்டாம்.

 

அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அறிமுகம் இல்லாத நபர் உங்களுடன் பேசுவதை வீடியோ பதிவு செய்தோ, ஸ்கிரீன் ஷாட்டோ எடுத்து பணம் கேட்டு மிரட்டினால் போலீஸிடம் புகார் அளிக்க வேண்டும்.

 

உங்களது வங்கி கணக்கு எண் தொடர்பான விவரங்களை செல்ஃபோனில் தொடர்பு கொண்டு யாராவது கேட்டால் கொடுக்க வேண்டாம். ஆன்லைனில் குறைந்த விலையில் ஆக்சிஜன் சிலிண்டர் தருவதாக கூறினால் முன்பணம் செலுத்த வேண்டாம்.

 

இதயத் துடிப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை கண்டறியும் கருவி என்றுகூறி வரும் எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அந்த செயலி மூலம் உங்களது கை ரேகைகளை பயன்படுத்தி தகவல்களை திருட வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தைகள் ஆன்லைனில் என்ன விளையாடுகிறார்கள்? என்பதை கண்காணிக்க வேண்டும்.

 

பணம் செலுத்தி ஆன்லைனில் குழந்தைகள் விளையாடுவது குறித்து கண்காணிப்பு செய்ய வேண்டும். அதுபோன்ற விளையாட்டுகளை  தவிர்க்க  குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களே உஷார்; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Cybercrime cops warn against sharing photos on social media

சமூக வலைத்தளங்களில் போட்டோக்களை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆன்லைன் வர்த்தகம், வேலை வாய்ப்பு, லோன் தருவது, கிரெடிட் கார்டு லிமிட் அதிகரித்து தருவது, தவறான பார்சல் அனுப்பி இருப்பது, பான் - ஆதார் கார்டை வங்கி கணக்கில் சேர்ப்பது, வங்கி ஏடிஎம் கார்டை புதுப்பித்தல், போலியான கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் செய்வது, மலிவு விலையில் பொருட்கள், ஆன்லைனில் விற்பனை போன்ற எந்த வகையான சைபர் கிரைம் குற்றங்களிலும் பணத்தை இழக்க வேண்டாம்.

சமூக வலைத்தளங்களில் கிவ் - அப் போன்று வரும் லிங்கை கிளிக் செய்து யூசர் ஐடி மற்றும் ஓடிபி எண் பகிர்வது, சமூக வலைத்தளங்களில் தன் போட்டோவை அனைவரும் பார்க்கும்படி பொதுவாக பகிர்வதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் மோசடியில் பணம் இழப்பு ஏற்பட்டவுடன் அல்லது 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் உதவி எண் 1930-க்கு புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.