ஈரோட்டில் விளைநிலங்கள் மீது உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்ட இருப்பதை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இன்று எருமை மாடுகளிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டதை விவசாயிகள் முன்னெடுத்தனர்.


ஈரோடு மாவட்டம் மூலக்கரையில் விவசாய நிலங்கள் மீது உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கவிருக்கப்படுவதை எதிர்த்து விவசாயிகளும் அப்பகுதி மக்களும் கடந்த ஆறு நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று எருமை மாடுகளிடம் மனுகொடுக்கும் நூதன போராட்டத்தை முன்னெடுத்தனர். பொதுமக்கள் ஒன்றாக திரண்டு உயர் மின்னழுத்த கோபுரம் வேண்டாம் என்று எருமை மாடுகளிடம் மனுவை நீட்டினர்.
அதேபோல் திருப்பூரில் இதே கோரிக்கையை முன்னிறுத்தி திருப்பூர் பல்லடம் பகுதியில் கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.