dmk udhayanidhi stalin speech

தமிழ்நாடுபட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒருமாத காலமாகத்தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளைத்தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. வரும் செப்.13 ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் பல்வேறு அறிவிப்புகளைத்தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் புதுக்கோட்டையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.

Advertisment

அப்போது விழா மேடையில் பேசிய சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்,''சட்டமன்றத்தில் நாங்க எல்லாம் போய் உட்கார்ந்து இருக்கிறோம். எங்களால் ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை. போர் அடிக்குது. ஏனென்றால் யாருமே எதிர்த்துப் பேச மாட்டேங்குறாங்க. அதிமுகவின் கொறடா எஸ்.பி.வேலுமணி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம்எல்லாம் நம்மை பாராட்டி பேச ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு நம்ம அரசினுடைய செயல்பாடு இருக்கிறது. இதேபோல் முதல்வர் ஆட்சி செய்து கொண்டிருந்தார் என்றால் அடுத்த 5 வருஷத்துக்கு ஓட்டு கேட்கவே தேவையில்லை. அடுத்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் மிகப்பெரிய வெற்றி கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்றார்.