Published on 18/04/2018 | Edited on 18/04/2018
தமிழக ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக குற்றம்சாட்டி தி.மு.க. சார்பில் இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. சைதாப்பேட்டையில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர். அப்போது, ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக, மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.