மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறும் என்றும், கடந்த 2016ம் ஆண்டின் போது நடைபெற்ற விபத்தில் வலது காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. இந்த கம்பியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்றும் மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து நடிகர் கமலுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்று, அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகர் கமல்ஹாசனை சந்தித்து நலம் விசாரித்தார். இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு அறுவை சிகிக்சை நலமுடன் நடைபெற வேண்டி சென்னையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தியாகராஜ நகரில் உள்ள விநாயகர் கோவிலில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.