dmk mp raja wife passed away political parties leaders

முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பியுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி (வயது 53) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (29/05/2021) காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமது மனைவியை இழந்து வாடும் ஆ.ராசாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

சோதனை, ஏற்ற, இறக்கங்கள் அனைத்திலும் ஆ.ராசாவுக்கு துணையாக இருந்தவரின் மறைவு பேரிழப்பு என்று ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார்.

நெருக்கடி காலங்களில் உற்ற துணையாக இருந்து தனது கணவருக்கு ஆறுதலாக இருந்தவர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆ.ராசாவுக்கு துணைவியாய், ஆறுதலாய், தேறுதலாய் இருந்தவர் பரமேஸ்வரி என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.