Published on 23/12/2022 | Edited on 23/12/2022

தமிழகத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் துணை முதல்வர் பொறுப்புக்குத் தகுதியானவர், அதனால் அவருக்குத் துணை முதல்வர் பொறுப்பு வழங்க வேண்டும் என திமுகவில் குரல் எழுந்து வருகிறது.
இந்நிலையில் மதுரை மாநகர் திமுகவைச் சேர்ந்த சக்தி விநாயகர் கணேசன் என்பவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வராக வேண்டி சபரிமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார். சபரி மலையில் “தமிழக முதல்வராக வேண்டி சபரிமலை யாத்திரை” என்ற பேனர் பிடித்தபடி புகைப்படம் எடுத்துள்ளார். அந்தப் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.