Skip to main content

விழுப்புரத்தில் ஆளுநருக்கு கறுப்பு கொடி காட்டிய திமுகவினர் கைது!

Published on 18/05/2018 | Edited on 18/05/2018
black


விழுப்புரம் மாவட்டத்திற்கு மக்கள் குறை கேட்கவும் திட்டப் பணிகளை ஆய்வு செய்யவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை புறப்பட்டு வானூர், பூத்துறை பகுதிக்கு வருகை தந்தார்.

பின்னர் அங்கிருந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்த அவர், அங்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் மக்கள் குறை கேட்க வந்தார். அங்கு அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ பொன்முடி தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் மஸ்தான் அங்கயர்கண்ணி, எம்.எல்.ஏக்கள் வசந்தன் கார்த்தி, மாசிலாமணி, ராதாமணி, உதய சூரியன் சீத்தாபதி சொக்கலிங்கம் மற்றும் சி.பி.எம், சி.பி.ஐ, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பெரும்திரளாக கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
 

black


மேலும் ஆளுநரே திரும்பி போ என்று கோஷமிட்டனர். இதில் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டிய 1000த்திற்கும் மேற்ப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார், டிஜஜி சந்தோஷ்குமார் தலைமையில் 1000த்திற்க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் வானூர் பகுதியில் ஆளுநருக்கு கறுப்பு கொடி காட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்