தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசிகள், ரெம்டெசிவிர், ஆக்சிஜன், மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து அரசு அதிகாரிகளுடன் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிதித்துறைச் செயலாளர், வருவாய்த்துறைச் செயலாளர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் நேற்று (03/05/2021) ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.