Skip to main content

''தீபாவளி என்பது பெளத்த விஞ்ஞான விழா'' -ஆம்ஸ்ட்ராங் பேச்சு

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

Diwali Buddhist Science Festival - Armstrong speech

 

தீபாவளி பண்டிகைக்கு காரணமாக சொல்லப்படும் கதைகள் ஏராளம். அதில் வால்மீகி ராமாயணத்தில் கொடியவனான ராவணனை அழித்து தன்னுடைய வனவாசம் முடிந்து சீதையுடன் அயோத்திக்கு ராமர் திரும்புவதை விளக்கேற்றிக் கொண்டாடியதாகவும், சிவபெருமான் அசுரனின் தலையில் கைவைக்க வெடித்து சிதறியதாகவும் என இப்படி எண்ணற்ற கதைகளை சொன்னாலும் தீபாவளிக்கு என்று ஒரு வரலாற்று உண்மை இருப்பதாக தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் பேசியுள்ளார்.

 

தீபாவளி பண்டிகை குறித்து அவர் பேசியுள்ளதாவது, ''அக்காலத்தில் பெளத்த மடங்களில் தங்கியிருக்கும் அறவணடிகள் தங்களின் ஓய்வு காலங்களில் நேரத்தை வீணாக்காமல் பழங்களின் தன்மைகளையும், செடிகளின் தன்மைகளையும் மற்றும் உலோகங்களின் தன்மைகளையும் ஆராய்ந்து அதன் குணங்களையும் பயன்களையும் உறுதிசெய்த பின் அதை மன்னரிடத்தில் கூறி அவரின் ஒப்புதலுடன் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அப்படி புதியதாய் ஒரு பொருளை கண்டுபிடிக்கும் நாளை புத்தாடை உடுத்தி மற்றவர்களுக்கு ஈகை பண்புடன் உணவு பதார்த்தங்களை செய்து கொடுத்து கொண்டாடியதுதான் பின்னர் நாட்களில் பண்டிகையாக கொண்டாடப்பட்டது. தென்னிந்தியாவில் பள்ளி என்னும் நாட்டை பகுவன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அரசனிடம் சென்ற அறவணடிகள் எள் எனும் தானியத்தின் மூலம் தயாரிக்கப்பட்டதை எண்ணையை கொடுத்து இது கபாலரோகம், சோமரோகம், மேகநோய், மலச்சிக்கல், எலும்புருக்கி, ஈளை ஆகிய நோய்களுக்கு இது மருந்தாக அமையும் மேலும்  சுவையான பல பலகாரங்கள் தயாரிக்க பயன்படும் என எடுத்துரைத்தனர்.

 

அதனை மன்னன் பகுவன் ஆய்வு செய்து உறுதிசெய்த பின் நாட்டில் அதிகமாக எள்ளை விளைவித்து நாட்டு மக்களை வரவழைத்து கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய்யை கொடுத்து தலையில் தேய்க்கச் சொல்லியதோடு அந்நாட்டில் ஓடும் தீபவதி நதியில் நீராடச் செய்தான். மேலும் அந்த எள் நெய்யில் (நல்லெண்ணையில்) பலகாரங்கள் செய்து அனைவருக்கும் கொடுத்து மக்களை மகிழ்வித்தான். தீபவதி நதியில் நீராடிய அந்த நாளை மறவாமல் மக்கள் ஆண்டுதோறும் புத்தாடை உடுத்தி மற்றவர்களுக்கு ஈகை தானம் செய்து வழக்கம் போல் எள் எண்ணெயில் பலகாரங்கள் சமைத்து மகிழ்ச்சியாக கொண்டாடி வந்தனர். தீபவதி பண்டிகை காலப்போக்கில் மருவி தீபாவளி பண்டிகையானது.இந்த வரலாற்றை தாமாக சொல்லவில்லை. உறுதியான வரலாற்று தகவலை அயோத்திதாச பண்டிதர் பின்வரும் பெருந்திரட்டு பாடல் மூலம் உறுதி செய்கிறார்.

 

“பள்ளியம்பதிலூர்ந்த பகு வனார் கிழவகாலந் தெள்ளியலுழவிலூறுஞ் சேர்புநல் புஞ்சைவாவி எள்ளக வெண்ணெயாய்ந்த விடயமற்றவர்குறிப்ப வெள்ளியல்மற்றாகார மற்சிர மகிழ்வென்றாங்கே சிர முருவெள் நெய்மற்றுந் திரளொடு செந்நெலீய்ந்து கரமுகிலேந்திகங்கைக் கரை தீபவதியைநாடித் துரமுறத் தோய்ந்து நீரிற்று வைந்துமெய்யக நறப்ப பரவருமசதி மற்றும் பாயிலுமகலுமென்றான்” பெளத்தத்தின் வழிநின்று அயோத்திதாசர் கூறும் இச்செய்தி மூடத்தனம் ஏதுமின்றி பகுத்தறிவுக்கு உட்பட்டதாகும் விஞ்ஞான பூர்வமாகவும் உள்ளது.

 

பெளத்தத்தை பின்பற்றும் அண்டைய நாடுகளிலும் இதுபோன்ற இருப்பது இத்தகவலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. முன்னோர் வழி நின்று கொண்டாடி மகிழ்வோம் தீபாவளி திருநாளை'' என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

எம்.பிக்கு அறை விட்ட பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Bahujan Samaj Party executive leaves room for MP in maharashtra

மகாராஷ்டிரா  மாநிலத்தைச் சேர்ந்தவர் கவுதம். இவர், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (17-07-24) தாதர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

அந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை எம்.பி கவுதம் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அப்போது, அக்கட்சியைச் சேர்ந்த நிமா மோஹர்கர் என்ற பெண், எம்.பி கவுதமை அறைந்தார். இதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இது தொடர்பாக தாதர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தியதில், சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பண்டாரா-கோண்டியா தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பு கிடைக்காததால் பிஎஸ்பி தொண்டரான நிமா மோஹர்கர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர், எம்.பி கவுதமை தாக்கியதாகத் தெரியவந்துள்ளது. 

இந்தச் சம்பவத்தின் வீடியோ வைரலானதால், மொஹர்கர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் டோங்ரே கூறுகையில், ‘கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மொஹர்கர் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. மக்களவைத் தேர்தலில் அவர் வலுவான வேட்பாளராக இருப்பார் என்பதில் கட்சிக்கு உறுதியாக தெரியவில்லை. அதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் இவ்வாறு நடந்துகொள்வதை ஏற்க முடியாது. அவர் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், மேலும் அவர் மீது தாதர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். 

Next Story

முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா; டன் கணக்கில் குவிந்த பூக்கள்!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Muthumariamman temple flower sprinkling festival Tons of flowers

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று (14.07.2024) பூச்சொரிதல் விழா நடந்தது. கிராமத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள், கிராமத்தினர் மேளதாளங்கள் முழங்க பூ தட்டுகளுடன் ஊர்வலமாகக் கோயிலுக்குக் கொண்டு வந்து அம்மனுக்கு மலரபிஷேகம் செய்தனர்.

அதே போலச் செண்டை மேளம், டிரம்ஸ் வானவேடிக்கைகளுடன் வாகன உரிமையாளர்கள் வாகனங்களிலும் பூ தட்டுகள் கொண்டு வந்தனர். டன் கணக்கில் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து இரவு கரகாட்டம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை நாலாஞ்சந்தி கருப்பர் உள்படக் கிராமத்தில் உள்ள கோயில்களில் பொங்கல் வைத்துச் சிறப்பு வழிபாடுகள் செய்து வரும் 21ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி 10 நாட்கள் வரை நடக்கிறது. 

Muthumariamman temple flower sprinkling festival Tons of flowers

அதன்படி வரும் 28 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பொங்கல் திருவிழாவும் 29 ஆம் தேதி திங்கள்கிழமை தேரோட்டத் திருவிழாவும் நடக்கிறது. திருவிழா நாட்களில் பகலில் அன்னதானமும் இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்து வருகின்றனர்.