சத்யராஜ் மகளான திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார். தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சேவை செய்யும் இவர், தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில் திவ்யா சத்யராஜ், இமேஜிங் சேவைக்கான தொகையை குறைக்க வேண்டும் என தனியார் மருத்துவமனைக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய திவ்யா சத்யராஜ், “ஒரு ஆண்டின் மருத்துவச் செலவுகள் 63 மில்லியன் இந்தியர்களை வறுமையில் தள்ளுகின்றன. MRI, CT, அல்ட்ராசவுண்ட் போன்ற கண்டறியும் இமேஜிங் சேவைகளுக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் கோடியில் வருமானத்தை ஈட்டுகிறது. ஆனால் ஏழை குடும்பத்தைச் சேரந்த மக்கள் ஒரு சில அவரசகாலங்களில் தனியார் மருத்துமனைக்கு செல்லும் பொழுது அவர்களுக்கான அவசர சிகிச்சைக்கு பணமே முதன்மையாக இருப்பதால் பல உயிர்கள் இழக்க நேரிடுகிறது. ஆகையால் எம்.ஆர்.ஐ மற்றும் இமேஜிங் சேவைகளின் விலையைக் குறைக்க ஒரு தனியார் மருத்துவமனையைக் கூட கொடுக்க மறுக்கிறது.
ஒரு நாளைக்கு 5,000க்கும் மேற்பட்ட எம்.ஆர்.ஐ மற்றும் பிற இமேஜிங் சேவைகளை தனியார் மருத்துவமனை செய்கிறது. ஒரு முழு உடல் எம்.ஆர்.ஐயின் விலை ரூ. 40,000 வசூலிக்கப்படுகிறது. அதில் ஏழை, எளிய மக்களுக்கு 30 சதவீதம் குறைப்பதில் அவர்களுக்கு எந்தவகையான நஸ்டமும் ஏற்படப்போவதில்லை. ஆகவே விலை குறைப்பை நடைமுறைப்படுத்துங்கள் என்று மகிழ்மதி இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள் ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டோம்” எனத் கூறியுள்ளார்.
எம்ஆர்ஐ மற்றும் இமேஜிங் சேவைகளின் விலையைக் குறைக்க ஒரு தனியார் மருத்துவமனையைக் கோரியபோது, “அவர்களின் பதில் என்னவாக இருக்கின்றது என்றால் "எங்களிடம் சிறந்த இயந்திரங்கள் உள்ளன, ஏழைகள் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும், இயந்திரங்களைப் பராமரிக்க எங்களுக்கு பணம் தேவை" போன்ற பரிதாபமான விளக்கங்களை நிர்வாகம் எங்களுக்கு வழங்கியது எனத் தெரிவித்திருக்கிறார்.