Skip to main content

'விருத்தாசலத்தை மாவட்டமாக பிரித்துக்கொடு' -தமிழக முதல்வருக்கு  அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்!

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

'Divide the Vridthachalam into districts' - a protest to send a postcard to the Chief Minister of Tamil Nadu!

 

கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருத்தாசலத்தைத் தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி, 'விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம்' சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

இந்நிலையில் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் தமிழக முதல்வருக்கு தொடர் அஞ்சலட்டை அனுப்புவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 04-ஆம் தேதி விருத்தாசலம் தலைமை தபால் நிலையத்தின் முன்பு தமிழக முதல்வருக்கு அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக விருத்தாசலம் வட்டம் மங்கலம்பேட்டை அஞ்சலகத்தில் விருத்தாசலம் மாவட்டம் அமைக்க வலியுறுத்தி அஞ்சலட்டை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

 

மாவட்ட விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்க.தனவேல் தலைமையில்  கோரிக்கையை வலியுறுத்தி  முழக்கங்களை எழுப்பிய விழிப்புணர்வு இயக்கத்தினர் தமிழக முதல்வருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் கதிர்காமன், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிருஷ்டீபன், மக்கள் நீதி மய்யம் நிர்வாகி வேங்கடகிருஷ்ணன், இந்திய குடியரசு கட்சி மாநில இணைப் பொதுச்செயலாளர் மங்காப்பிள்ளை, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.இக்பால், பா.ம.க நகர செயலாளர் ராமகிருஷ்ணன்  உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

அப்போது அவர்கள், "கடந்த 20 வருடமாக விருத்தாசலத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருவதால், தமிழக அரசுக்கு நினைவூட்டும் வகையில் விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும்  அரசியல் கட்சிகள் சார்பில் தமிழக முதல்வருக்கு  நூற்றுக்கணக்கான அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெறுகிறது. மேலும் விருத்தாசலத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்கும் வரை தொடர்ச்சியாக பல கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது" என தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் அடிகளார்கள் போராட்டம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
struggle at Trichy Srirangam

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோவில் ஆரியப்படாள் வாசல்  அருகே  கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இச்சிலை கடந்த 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு திருமால் அடியார் குழாம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர், அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பண்ணிசைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

'திரும்பி போ... திரும்பி போ...'- இளைஞர் காங்கிரஸ் போராட்டம்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
 'Go back... Go back...'- Youth Congress struggle

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார், இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி பிற்பகல் 2.06 மணிக்கு சூலூருக்கு வர இருக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து பல்லடத்தில் 2.45 மணிக்கு மாதப்பூரில் நடைபெறும் பாஜக யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். மாலை  5.15 மணிக்கு சிறு குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாலை 6:45 மணிக்கு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை காலை 8.40க்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்படுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் குமரன் சிலை அருகில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'திரும்பி போ... திரும்பி போ... மோடியே திரும்பி போ...' என  கோஷங்களை எழுப்பி வருவதால் அந்த பகுதியில் போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கோவை அவினாசி பாளையத்தில் விவசாயிகள் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.