Published on 06/04/2021 | Edited on 06/04/2021

தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கோவை மணியக்காரன்பாளையத்தில் வாக்குச்சாவடி அருகே பூத் சிலிப்புடன் பணம் கொடுத்த திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூத் சிலிப் உடன் பணம் தந்த திமுக பிரமுகர்கள் வெள்ளியங்கிரி, ரவி பாலு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரிடம் இருந்து 73,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.