/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/stalin_218.jpg)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் திமுக தலைவரும், தற்போதைய தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் மீது 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அனைத்து வழக்குகளையும் நீக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வழக்குகளை நீக்கி அரசாணை வெளியிட்டுள்ளதாக அரசு அளித்த விளக்கத்தை ஏற்று அவதூறு வழக்குகள் அனைத்தையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)