Skip to main content

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செம்பு உலோக ஆணிகள் கண்டுபிடிப்பு

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
nn

சங்ககால கோட்டைகளில் எஞ்சியுள்ள வட்டக்கோட்டையான பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் 18.06.2024 அன்று தமிழக முதலமைச்சரால் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைக்கப்பட்டது. அகழாய்வு இயக்குநர் தங்கத்துரை தலைமையிலான அகழாய்வுக் குழுவினர் தொடர்ந்து அகழாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டையின் மையப்பகுதியில் உள்ள அரண்மனை திடலுக்கு தெற்கே அமைக்கப்பட்டுள்ள 3 புதிய அகழாய்வு குழிகளில் B21 எனும் குழியில் செங்கல் தளம் ஒன்று வெளிப்பட்டது. தென்கிழக்கு மூலையில் வெளிப்பட்ட இந்த செங்கல் தளம் 280 cm நீளம் மற்றும் 218 cm அகலம் கொண்டுள்ளது.

இரண்டாம் கட்ட அகழாய்வு தொடங்கிய 26 நாட்களுக்கு பிறகு 424 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளது. இவை கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள், இரும்பு பொருட்கள் மற்றும் செப்புப் பொருட்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழாய்வு தொடங்கி 26 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில்  இன்று சனிக்கிழமை A 22 என்ற  அகழாய்வு குழியில் 4 செம்பினால் ஆன ஆணிகள் கிடைத்துள்ளது  இதுபோன்று C 20 என்ற அகழாய்வு குழியிலும் செம்பினால் ஆன ஆணி ஒன்று கிடைத்துள்ளது. இதன் எடை 2 gm  நீளம் 2.3cm மற்றும் அகலம் 1.2cm . இதுவரை இரும்பினால் ஆன ஆணிகளே கிடைத்து வந்த நிலையில் தற்போது செம்பினால் ஆன ஆணிகள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக G27 எனும் அகழாய்வுக் குழியில் செம்பினால் ஆன 3செ.மீ நீளமுள்ள அஞ்சனக்கோல் (மைத்தீட்டும் குச்சி) ஒன்றும் கிடைத்திருந்தது. தற்போது பெற்பனைக்கோட்டை அகழாய்வில் தொடர்ந்து செம்பினால் ஆன பொருட்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்