அண்மையில் ராஜராஜ சோழன் பற்றிய சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு கண்டனங்களை பெற்றவர் திரைப்பட இயக்குனர் ரஞ்சித். இதனால் பல்வேறு புகார்கள் அவர் மீது குவிய தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அண்மையில் அவருக்குமுன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவரை திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டது.

Advertisment

director ranjith speech

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ரஞ்சித், ராஜராஜசோழன் உயிருடன் இருந்திருந்தால் என் விமர்சனத்தை ஏற்று என்னுடன்உரையாட வந்திருப்பார். இந்த சர்ச்சை பேச்சினால்நீங்கள் மன உளைச்சல் அடைந்தீர்களா என கேட்கிறார்கள்.என் கருத்தால் மற்றவர்கள்தான்மன உளைச்சல் அடைந்துள்ளனர்.

Advertisment

இங்கு ஏன் குறிப்பிட்டவர்களிடம் மட்டும்நிலம் உள்ளது ஏன் எங்களிடம் நிலம்இல்லை என ஆராய்ந்து உள்ளேன். ராஜராஜ சோழனை பற்றி நான்விமர்சித்தது விமர்சித்ததுதான். ராஜ ராஜ சோழன் பற்றி நான் பேசவில்லை என்று மறுத்து ஓடி ஒளியவில்லை, யாருக்கும் எதற்கும் பயப்பட மாட்டேன். நான் அம்பேத்கர் வழியை பின்பற்றுபவன் என்பதால் எதற்கும் பயப்படமாட்டேன்எனபா.ரஞ்சித் ஆவேசமாக பேசியுள்ளார்