Skip to main content

திண்டுக்கல் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்கியது எப்படி! புதுமுக வேட்பாளரை இறக்கும் ஐ.பி!

Published on 15/03/2019 | Edited on 15/03/2019
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் வேடசந்தூர் நீங்கலாக திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் கொண்டதுதான் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி.
 
 
இத்தொகுதியில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக ஐ.பெரியசாமியும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினராக சக்கரபாணியும், பழனி சட்டமன்ற உறுப்பினராக செந்தில்குமாரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினராக ஆண்டி அம்பலம் என நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கைப்பற்றி திண்டுக்கல் மாவட்டத்தை திமுக கோட்டையாக உருவாக்கி உள்ளனர்.
 
dmk

 

 
இந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் திண்டுக்கல் தொகுதியை கேட்டு காங்கிரஸ் போராடி வந்தனர் அதிலேயும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் கார்த்தி சிதம்பரம், இளங்கோவன், குஷ்பு போன்ற முக்கிய தலைவர்கள் போட்டிபோட உள்ளனர் என்றும் பேச்சு பரவலாக எதிரொலித்து வந்தது. ஆனால் கழக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் உள்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் இத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது திண்டுக்கல் மாவட்டத்தையே திமுக கோட்டையாக உருவாக்கி நான்கு சட்டமன்ற தொகுதிகளை தக்கவைத்து  வைத்திருக்கிறோம்  அப்படி இருக்கும்போது இத்தொகுதியை  திமுகவுக்குத்தான் ஒதுக்க  வேண்டுமென தலைவர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
 
dmk

 

 
 
அதன் அடிப்படையில்தான் திமுக-காங்கிரஸ் கூட்டணியின்  இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் திமுக தலைவர் ஸ்டாலினும் திண்டுக்கல் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க முடியாது திமுக தான் போட்டி போடும் என வெளிப்படையாகவே சொல்லி விட்டார். அதன் அடிப்படையில் தான் திண்டுக்கல் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதைக்கண்டு ஐ.பெரியசாமி, சக்கரபாணி, செந்தில்குமார், ஆண்டிஅம்பலம் ஆகிய நான்கு எம்எல்ஏக்களும் மாவட்ட பொறுப்பில் உள்ள சில  உபிகளும் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். இப்படி தலைவரிடமும், காங்கிரசுடனும் போராடி திண்டுக்கல் தொகுதியை திமுகவுக்கு கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி வாங்கி இருக்கிறார்.
 
       dmk

 

 
 
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை 1952-ல் பாராளுமன்ற தொகுதி உருவான காலத்திலிருந்து 2019 வரை 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் 1967-ல் திமுக பாராளுமன்ற உறுப்பினராக அன்புச்செழியன் வெற்றி பெற்றிருக்கிறார் அதைதொடர்ந்து 1971-ல் ராஜாங்கமும் 1980-ல் மாயத்தேவர் என மூன்று முறை இத் தொகுதியை திமுக தக்கவைத்துள்ளது.
 
 
அதுபோல் காங்கிரசும் இத்தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளுடன் ஐந்து முறை வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி திமுக காங்கிரஸ் கூட்டணி இத்தொகுதியில் எட்டு முறை வெற்றி பெற்றிருக்கிறது. அந்த அளவுக்கு திமுகவின் செல்வாக்கை வைத்து காங்கிரசும் இத்தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் திமுக இத்தொகுதியில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில்தான் காந்திராஜன் தோல்வியைத் தழுவினார். அதனாலதான் இந்த பாராளுமன்ற தேர்தலில் அவசியம் திமுக வெற்றி பெறும் என ஐ.பி. உள்பட மாவட்ட பொறுப்பாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் தான் திண்டுக்கல் தொகுதி திமுகவுக்கு  கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி திமுக கோட்டையாக உள்ள திண்டுக்கல் தொகுதியில் உடன்பிறப்புகள் போட்டி போடுவதற்காக முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், சாணார்பட்டி முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயன், பழனி முன்னாள் சேர்மன் வேலுமணி உள்பட 20க்கும் மேற்பட்ட உ.பி.கள் சீட் கேட்டு விருப்பமனு தாக்கல் செய்து அதன் அடிப்படையில் நேர்காணலுக்கும் சென்றுவிட்டு வந்து இருக்கிறார்கள்.
 
dmk

 

இப்படி தலைவர் ஸ்டாலின் நடத்திய நேர்காணலில் கலந்து கொண்ட உடன்பிறப்புகள் அனைவருமே ஐபி ஆதரவாளர்கள் என்பதால்  சீட்டு வாங்குவதற்கும் போட்டி போட்டு வருகிறார்கள். இருந்தாலும் தற்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலை வாக்காள மக்களின் மனநிலையை பொறுத்து யாரை? நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என ஐ.பெரியசாமி தொடர்ந்து கட்சி மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். அதன் அடிப்படையில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் மூலம் விருப்பமான  கட்டிய கட்சி பொறுப்பாளர்களில்  மேற்கு அல்லது கிழக்கு பகுதியில் உள்ள ஒரு உடன் பிறப்புக்கு  சீட்டுகொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும்  புதுமுகமான உடன் பிறப்பு அப்படிபட்ட புதுமுகம் வேட்பாளரைதான் ஐ.பி.தேர்தல் களத்தில் இறக்க தயாராகி வருகிறார் என்ற பேச்சும் பரவலாக எதிர்ஒலித்து வருகிறது. அதன் மூலம் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை திமுக கோட்டையாக உருவாக்க திமுக உடன்பிறப்புக்களும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி வருகிறார்கள்.
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.