Skip to main content

கோட்டை மாரியம்மன் மாசி திருவிழா; மகிழ்ச்சியில் பக்தர்கள் 

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

dindigul kottai mariamman temple festival

 

திண்டுக்கல்லில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு மாசி திருவிழா நேற்று  மாலை பூத்த மலர் பூ அலங்கார மண்டகப்படி உடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக திருக்கோயிலின் உள்பிரகாரம் முழுவதும் வண்ண வண்ண கோலமிட்டு சாமி உருவங்கள் பக்தர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

 

கோட்டை மாரியம்மன், மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தது. மேலும் பூத்த மலர் பூ அலங்கார மண்டகப்படி குழுவினரின் சார்பாக நேற்று கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட விஷ்ணு துர்க்கை அம்மன்  வீற்றிருக்க வலது புறம் சரஸ்வதியும் இடதுபுறம் மகாலட்சுமியும் இருப்பது போல் மாசி திருவிழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியாக சிறப்பு அலங்காரங்களுடன் காட்சி அளித்தார். கோவில் வளாகத்தில் வண்ணப் பொடிகள் மற்றும் பூக்களால் வரையப்பட்டிருந்த மாசாணி அம்மன், வரலட்சுமி நோன்பு செட், வராஹி அம்மன்,  சிவலிங்கம் உள்ளிட்ட சாமி உருவங்களை பக்தர்கள்  நீண்ட வரிசையில்  காத்திருந்து பார்வையிட்டு தரிசனம் செய்தனர்.

 

அதைத் தொடர்ந்து தான் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக  இன்று காலையில் கோட்டை மாரியம்மன் பூவால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் நகரில் உள்ள முக்கிய வீதிகளான மேற்கு ரத வீதி. பழனி ரோடு. கிழக்கு ரத வீதி என முக்கிய வீதிகளில் கோட்டை மாரியம்மன் பவனி வந்ததைக் கண்டு ஆங்காங்கே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரும் திரளாக நின்று  உதிரிப் பூக்களை காணிக்கையாக செலுத்தி கோட்டை மாரியம்மனை தரிசித்தனர். மேலும் கோட்டை மாரியம்மன் பூத்தேரில் வருவதைக் கண்டு ஆங்காங்கே பக்தர்களுக்கு பிரசாதம் நீர் மோர் வழங்கப்பட்டது.

 

அதைத் தொடர்ந்து  வரும் 21 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை கொடியேற்றமும், வரும் மார்ச் மூன்றாம் தேதி பூக்குழி இறங்குதல் மற்றும் 4ம் தேதி தசாவதார விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் மாசி திருவிழா சிறப்பாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஊரடங்கு அனைத்தும் தளர்வுகள் செய்து நடைமுறை வாழ்க்கை தொடர்ந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கோட்டை மாரியம்மனை சாமி தரிசனம் செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.