Skip to main content

பாழடைந்த வீடு இடிந்து 2 சிறுவர்கள் பலி! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!  

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

Dilapidated house collapses, 2 boys passes away! Chief Minister MK Stalin announces relief!

 

கடலூர் அடுத்த வடக்கு ராமாபுரம் எஸ்.புதூர் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு 100 வீடுகள் உள்ள நிலையில் இந்த சமத்துவபுரம் பின் பக்கம் இலங்கை தமிழர்களுக்காக 2013-ஆம் ஆண்டு தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் 130 மறுவாழ்வு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. ஆனால், அந்த வீடுகள் சரியில்லை, தங்களை மீண்டும் அகதிகள் போல் அடைத்து வைக்கும் நிலையில் வீடுகள் உள்ளன என கூறி அதில் இலங்கை தமிழர்கள் குடியேற மறுத்து விட்டனர். இந்த நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அந்த வீடுகள் பாழடைந்த நிலையிலேயே உள்ளன.

 

Dilapidated house collapses, 2 boys passes away! Chief Minister MK Stalin announces relief!

 

தற்போது அந்த இடத்தில் இருந்த 130 வீடுகளில் பல வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் 50 வீடுகள் மட்டும் தற்போது பாழடைந்து காணப்பட்டன. அவற்றிலும்  அவ்வப்போது சமூக விரோத செயல்கள் அந்த வீடுகளில் நடைபெறுவதாக தொடர் குற்றசாட்டுகள் எழுந்தன. மேலும் வீட்டில் இருந்த மின்சார வையர்கள் காணமால் போகிறது எனவும் புகார்கள் எழுந்தது. மேலும் பெரியார் நினைவு சமுத்துவபுரம் பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் பாழடைந்த வீடுகளுக்கு சென்று கேம் விளையாடுவது, தூங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

 

Dilapidated house collapses, 2 boys passes away! Chief Minister MK Stalin announces relief!

 

அந்த வகையில் நேற்று மதியம் பாழடைந்த வீட்டிற்கு சென்ற சுதீஷ்குமார், வீரசேகரன், புவனேஷ் ஆகிய  17 வயதுடைய 3 சிறுவர்கள் கேம் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பாழடைந்த அந்த வீடு பயங்கர சத்தத்துடன் திடீரென முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. சத்தத்தை கேட்டு அதிர்நத அந்த பகுதி மக்கள் ஓடிச்சென்று பார்த்தபோது, இடிந்த வீட்டில் சிக்கி கொண்ட 3 சிறுவர்களை மீட்க துவங்கினர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 சிறுவர்களையும் மீட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வீரசேகரன், சுதீஷ் குமார் ஆகியோர் உயிரிழந்தனர். புவனேஷ்  எனும் சிறுவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தில் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் விசாரணை நடத்தி மீதமுள்ள வீடுகளையும் பார்வையிட்டனர். அருகாமையில் உள்ள பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள்  எச்சரிக்கை விடுத்தனர். 

 

இதனிடையே கட்டிட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்