Dikshitars kicking in the advisory meeting!

Advertisment

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கை வாபஸ் வாங்க வலியுறுத்தி கோவில் தீட்சிதருக்கு அடி உதை விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் திங்கள் இரவு தீட்சிதர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கலந்து கொண்டனர். இதில் கோவில் தீட்சிதர் நடராஜ் என்பவரிடம் தீட்சிதர்கள் சிவா, கௌரி, எஸ்.என்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் தீட்சிதர்கள் மீது போடப்பட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கை வாபஸ் வாங்கக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு நடராஜ் தீட்சிதர் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கு தான் கொடுக்கவில்லை என்றும், அது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் கொடுத்தது. அதனை நான் எப்படி வாபஸ் பெற முடியும் என கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணிடம் கூறி நீ தான் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்றும், அதுவரைக்கும் கோவிலில் உனக்கு எந்த ஒரு பங்கும் கிடையாது என அடித்து உதைத்துள்ளனர். இதில் காது, விலா எலும்பு, முழங்காலில் வலி அதிகமாகி, எச்சில் துப்பும் போது ரத்தம் வந்ததால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நடராஜ் தீட்சிதர் கூறியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் கார்த்தி என்கிற ஹேமசபேச தீட்சிதரிடம் கேட்டபோது அவர் கூறுவது அனைத்தும் பொய் என மறுத்துள்ளார்.