Published on 23/10/2021 | Edited on 23/10/2021

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஒரு லிட்டர் டீசல் விலை 36 காசுகள் அதிகரித்து 100.02 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 34 காசுகள் அதிகரித்து 104.96 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையிலும் பெட்ரோலை தொடர்ந்து ஒரு லிட்டர் டீசலின் விலையும் 100 ரூபாயைத் தாண்டியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 33 காசுகள் அதிகரித்து 100.25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 30 காசுகள் அதிகரித்து 104.22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.